×

மரம் வளர்த்தால் ரூ.2500 ஓய்வூதியம்: அரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர்: 75 வயதுக்கும் மேலான மரங்களை வளர்ப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2500 ஓய்வூதியம் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் கன்வர்பால் குர்ஜார் கூறுகையில்,‘‘ வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை போல் 75 வயதுக்கும் மேற்பட்ட மரங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2500 பென்சன் வழங்கப்படும். மனிதர்கள் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் முக்கியம். மரங்களை பாதுகாக்காவிடில், ஆக்சிஜன் கிடைப்பது சிரமம் ஆகி விடும். 75வயதான பெரிய மரங்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும். மரத்தை வளர்ப்பவரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் மரங்களை தேர்வு செய்வதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு நேரடியாக சென்று அவற்றை ஆய்வு செய்யும். பட்டு போனவை,நோய் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு இந்த சலுகை கிடைக்காது’’ என்றார்.

The post மரம் வளர்த்தால் ரூ.2500 ஓய்வூதியம்: அரியானா அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariana Govt ,Chandigarh ,Aryana government ,Ariana government ,Dinakaran ,
× RELATED அரியானா மைனாரிட்டி பாஜ அரசை உடனே...